இந்த பதிவை வழங்கிய முகநூல் நண்பர்
Shivani Anandam Yadav அவர்களுக்கு நன்றி...
இன்றையப் பதிவின் நாயகன் 'பகத்சிங்' அவர்களைப் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால்
பகத்சிங்கும் புரட்சியும் வேறு வேறல்ல ! பகத்சிங் என்றால் புரட்சி !
புரட்சி என்றாலே பகத்சிங் !இவர் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள "பங்கா" என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய ஜாட் சமுக குடும்பத்தில் பிறந்தார். இவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.இவர் விடுதலைப்போராட்டவீரர்களை கொண்டசீக்கியக்குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின்ரஞ்சித் சிங்மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.இவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமிதயானந்த சரஸ்வதியின்இந்து சீர்திருத்த இயக்கமானஆர்ய சமாஜைத்தைப் பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் தன்னுடைய பதின்மூன்று வயதில், காந்தியின் ஒத்துழையாமைஇயக்கத்தில் இணைந்த பகத்சிங் அவர்கள், 1922 ஆம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த "சௌரி சௌரா" வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். 'அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!' என முடிவுக்கு வந்தார். 1924ஆம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட "இந்துஸ்தான் குடியரசுக் கழகம்" என்னும் அமைப்பில் இணைந்தார். பிறகு 1926ல் சுதந்திர போராட்ட கலத்தில் பகத்சிங், சுகதேவ், பவதிசரணம் வேரா, எஷ்பால் போன்ற நண்பர்களுடன் இணைந்து "நவ்ஜவான் பாரத் சபா" என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர். இறப்புசென்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடிகுண்டு வீசியது மற்றும் துண்டு பிரச்சாரம் போட்டு "இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டு தானே சரணடைந்த பின்னர், காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக இவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது அப்போது
1931-மார்ச் 23ஆம் நாள் காந்தியிடம் மாளவியா கலக்கத்தோடு " இன்று மாலை பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிடப் போகிறாங்க நீங்கள் கவர்னர் ஜெனரலைப் பார்த்து தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும்படி கோரலாம் புறப்படுங்கள் ''என்றவுடன் காந்தி 'நான் செய்யக்கூடியதை எல்லாம் முன்பே செய்துவிட்டேன் .இனிமேல் ஒன்றுமில்லை '' என ஒரு பேப்பரில் எழுதி காட்டிவிட்டு மற்றோர் புறம்
காந்தி. "அந்தப் பையன்களைத் தூக்கிலிடுவதாக இருந்தால் கராச்சி காங்கிரசு மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலிடுவதுதான் நல்லது" எனவும் இர்வின் பிரபுவுக்கு கடிதம் எழுதியுள்ளார் காந்தி. ஆங்கிலேய அரசு அதை ஏற்று நிறைவேற்றிய பிறகு, கராச்சி மாநாட்டுக்கு வந்த காந்தியை எதிர்த்து, "பகத்சிங்கைக் கொன்றவரே திரும்பிப்போ" என்று ஆத்திரத்துடன் பொங்கி எழுந்தனர் மக்கள்.
பகத்சிங், உத்தம்சிங் போன்றவர்கள் புரட்சிப் போராளிகளாக வாழ்ந்தபோது அவர்களை இழித்தும் பழித்தும் பேசி, காட்டிக் கொடுத்தும், அவர்களைத் தூக்கிலிட ஆதரவு தெரிவித்தும் துரோகம் செய்தது காங்கிரஸ் என கடந்த சில பதிவுகளிலே நாம் பார்த்தோமே ஆம் பகத்சிங், ராஜகுரு, மற்றும் சுகதேவ் ஆகியோர் 24 வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள். சிறையில் தனது தம்பி குல்வீர்க்குமாருக்கு இவர் 1931-ல் எழுதிய கடைசி கடிதத்தில், "நாளை காலை மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவது போல் நானும் காலை ஒளியில் கரைந்து போவேன். ஆனால் நம் குறிக்கோள் என்றும் நிலைத்திருக்கும். இன்று மறைந்து நாளை மீண்டும் பிறப்போம். நம் இந்தியத் தாய்களின் வயிற்றில் எண்ணற்ற இந்நாட்டின் வீரர்கள் வடிவில்" என்று குறிப்பிட்டு, மறுநாள் (மார்ச் 23) துாக்கு மேடை நோக்கி வீரநடைபோட்டு 24 வயதில் இந்த தேசத்திற்காக உயிரைக் கொடுத்து இளைஞர்களின் இதயங்களை வென்ற வீரனாய் மறைந்தார் பகத்சிங். இம்மாவீரனை நமது தேசத்தின் தியாகச் சுடர்களை நினைத்து பார்ப்போம். இவர்களின் கால்தடங்களையும், நினைவுகளையும் சுமந்து நிற்கும் வரலாற்றை வாசிப்போம். பாரதநாட்டை நேசிப்போம்.
வந்தேமாதரம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக