ஹிந்துத்துவம் என்ற சொல்லை உலகிற்கு பிரபலமாக்க, ஹிந்துத்துவம் என்ற புத்தகம் எழுதி, யார் ஹிந்து என்பதை வரையறுத்து ஹிந்துத்துவ கருத்துக்கு பிதாமகர் ஆன வீர சாவர்க்கர்
1) மனுஸ்மிருதி குறித்தும்,
2) தீண்டாமை குறித்தும்,
3) ஆலயத்தில் பூஜை செய்யும் தகுதிகளை குறித்தும் கூறிய கருத்துக்களை பார்க்கலாம்.
அனைத்து ஹிந்துக்களையும் அர்ச்சகர்கள் ஆகும் செயல்திட்ட்த்தை முதன்முதலில் முன்வைத்தவர்கள் திராவிட அமைப்புகளோ அல்லது பொரியாரோ அல்ல.
சுதந்திரவீர விநாயக தமோதர சாவர்க்கரே அதற்கான செயல்திட்டத்துக்கு 1929 இல் அடிக்கல் இட்டார்.
இன்று திராவிட இயக்கத்தவர் தாம் செய்த்தாக உரிமை கோரும் பல முற்போக்கு செயல்களை வெறுப்பு இல்லாமல் செய்த முன்னோடி சமூக சீர்திருத்தவாதிகள் இந்துத்துவர்களே ஆவார்கள்.
பிறப்படிப்படையிலான புரோகிதர்கள் தேவைப்படாத இந்து திருமண சட்டத்தை ஹிந்துத்துவரான நாராயண் பாஸ்கர் காரேயே முதலில் கொண்டு வந்தார்.
ஹிந்துத்துவரான ஹர்பிலாஸ் சாரதாவே குழந்தைகள் திருமணத்தை தடை செய்யும் சாரதா சட்டத்தைக் கொண்டு வந்தார்.
ஸ்வதந்திரவீர விநாயக தாமோதர சாவர்க்கர் (28-05-1883 முதல் 26-02-1966) ஒரு பயமற்ற சுதந்திரப் போராட்டவீரர்; சமூக சீர்திருத்தவாதி; எழுத்தாளர்; நாடக ஆசிரியர்; வரலாற்றாசிரியர்; அரசியல் தலைவர்; தத்துவவாதி எனப் பல திறமைகள் கொண்டவர்.
சாவர்க்கரின்கருத்துக்களை பார்க்கலாம்.
1) மனுஸ்மிருதி குறித்து:
சாவர்க்கர் மனுஸ்மிருதி குறித்த தனது கருத்துக்களை 1933 முதல் 1935 வரையிலான காலகட்டத்திலும், பின்பு 1956லிம் விரிவாக கூறியுள்ளார்.
1933ல் கணேக்ஷ் உத்சவத்தின்போதும், நவராத்திரியின்போதும் 9 நாட்கள் மனுஸ்மிருதி குறித்து உரையாற்றியுள்ளார்.
"மனுஸ்மிருதியில் பெண்கள்" என்ற தலைப்பில் 4 கட்டுரைகள் 1933ல் எழுதினார். அவை முற்போக்கு மராத்திய மாத இதழான "கிர்லோஸ்கரில்" பிரசுரமானது. மற்றொரு கட்டுரையும் இதே கருத்துடன் 1937ல் பிரசுரமானது. 'எது சரியான சனாதன தர்மம்" என்பது அது.
சாவர்க்கரின் கருத்துக்களை சுருக்கமாக கூறுவதென்றால்,
"மனுஸ்மிருதி கூறியபடி வாழ்வது இக்காலத்தில் சாத்தியமில்லை. ஏனெனில் காலம் மாறிவிட்டது; அதன் கருத்துக்கள் எல்லாக் காலத்திற்கும் பொருந்தக் கூடியவை அல்ல."
1936ல் சாவர்க்கர் கூறியது, (ஸம்கர சாவர்கர் வங்மய, தொகுதி-3, பக்-641) "தற்போதைய பிறப்பு அடிப்படையிலான சாதியும், சமூக ஏற்றத் தாழ்வும் ஒழிந்தால்தான் சமூகப் புரட்சி ஏற்படும். இது இந்து தேசம் எழுவதற்கும் புத்துணர்வு பெறுவதற்கும், உன்னத வளர்ச்சி அடைவதற்கும் அவசியம். அந்த கொடிய நச்சு மரம் அழியும்போது அதில் படர்ந்த கொடிகளும் தன்னாலேயே அழிந்துவிடும்"
ஒருமுறை சாவர்க்கர் தனது தொண்டர்களிடம் கூறினார் "நான் நடுக்கடலில் குதித்த ஆங்கிலேயர்களிடமிருந்து தப்ப முயற்சித்ததைக் கூட நீங்கள் மறக்கலாம்; ஆனால் சமூக சீர்திருத்தம் குறித்த எனது கருத்துக்களை மறக்க கூடாது"
2) தீண்டாமை குறித்து:
"தாழ்த்தப்பட்ட என சொல்லப்படும் மக்கள் பொது நீர்நிலைகளை பயன்படுத்துவதும், கோவில்களில் நுழைவதும் முற்றிலும் நியாயமானது; யாராலும் தடுக்க முடியாது. அனைத்து புண்யதலங்களும், கோவில்களும், வரலாற்று இடங்களும் மற்ற அனைத்து இந்துக்களுக்கும் என்ன விதிப்படி அனுமதிக்கப்படுகிறதோ, அவ்வாறே ஜாதி வேறுபாடின்றி இவர்களுக்கும் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று எழுதியுள்ளார். JATYACHCHEDAK NIBANTH- ESSAYS ON ABOLITION OF CASTE, SAMAGRA SAVARKAR VANGMAYA(SSV), 3:480.
1920ல் அந்தமான் சிறையில் இருந்து எழுதிய ஒரு கடிதத்தில் "அந்நிய ஆட்சியை இந்துஸ்தானத்திலிருந்து அகற்ற நான் போராடுவதைப் போல, ஜாதி ஏற்றத் தாழ்வு, தீண்டாமையை எதிர்த்து உறுதியாக போராடுவேன்" என எழுதினார்.
1924ல் "நான் உறுதியாக நம்புகிறேன்; தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதை எனது மரணத்திற்கு முன் பார்ப்பேன் என்று."
"இறந்த எனது உடலை தாழ்த்தப்பட்ட மக்களுடன், பிராமணர்களும், பனியாக்களும் இணைந்து தூக்க வேண்டும். அப்போதுதான் எனது ஆத்மா சாந்தியடையும்" என்றார்.
1941ல் 'சமூக சீர்திருத்தம், சமூக ஒற்றுமை செய்யப்படாத சுதந்திரம் வீணாகி விடும்' என அறிவித்தார். (balarao savarkar, akhand Hindustan ladhaa parva or the battle for undivided Hindustan, veer savarkar prakashan, 1976, p-202)
3) வேத சடங்குகளை செய்ய அனைவருக்கும் உரிமை:
"வேத சடங்குகளை வாசிக்கவும், கற்றுக் கொள்ளவும், விரும்பினால் அதை தானே செய்யவும் அனைத்து இந்துக்களுக்கும் உரிமை உள்ளது. பூஜாரி உரிமை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இந்து பூஜாரிக்கான தகுதிகளை அடைந்த எந்த இந்துவும் பூஜாரியாகலாம்." (1935, ஜத்யுச்செடக் நிபந்த, ஸம்கர சாவர்கர் வங்மய, தொகுதி-3, பக்-480).
ரத்னகிரியில் 'பதித பாவன மந்திர்' என்ற கோவிலைக் கட்டி எல்லா ஹிந்துக்களும் சாதி வேறுபாடுகள் இன்றி இன்றும் வழிபாடு நடத்த செய்தவர் வீரசாவர்க்கர்.
ஹரிஜன சமுதாயத்தை சேர்ந்தவரை அர்ச்சகர் ஆக்கிய முதல் இந்திய அரசியல் தலைவர் வீர்சாவர்க்கர்தான்.
அப்போது டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேடு "சமூக சமத்துவத்தைப் பொறுத்தவரையில் பழமைவாதத்தை மிகக் கடுமையாக எதிர்த்து போராடிய விசயத்தில் சாவர்க்கருக்கு இணையாக டாக்டர் அம்பேத்கர் தவிர வேறு யாருமில்லை. " என்றது