நண்பர்கள்

13 நவ., 2014

பெங்களூரூ: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரும் ஓமன் நாட்டு மன்னர் நலமாக வேண்டி கர்நாடக மாநிலம் மங்களூரூவில் விஷேக யாகம் நடந்து வருகிறது

ஓமன் நாட்டின் மன்னராக கடந்த 1970-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சுல்தான் குவாபூஸ் பின் சையத் அல் சையத் (72), இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் முதல் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு பின்னர் கடந்தஅக்டோபர் 2-ம் தேதி ஓமன் நாட்டு அரண்மணை வட்டாரம் பகிரங்கமாக வெளிப்படுத்தியது.இந்நிலையில் , மன்னர் பூரண நலமாக வேண்டி சிறப்பு யாகம் நடத்திட முடிவு செய்யப்பட்டு அதற்காக கர்நாடகா மாநிலம் பெங்களூரூவைச் சேர்ந்த சந்திரசேகர சுவாமி என்ற ஜோதிடரின் ஆலோசனைப்படி அவரதுதலைமையில் வேத விற்பன்னர்கள் சமீபத்தில் மஸ்காட் சென்று சிறப்பு ஹோமம் நடத்திவிட்டு நாடு திரும்பியுள்ளனர்.அதே போன்று இந்தியாவில் மங்களூரூவில் சிறப்பு யாகம் கடந்த 9-ம் தேதி மங்களூரூவில் துவங்கியது.22 வேத விற்பன்னர்கள் வேத மந்திரம் முழங்க , மகா தன்வந்திரி யாகம், பூர்ண நவக்கிரக சாந்தி ஹோமம், உள்ளிட்ட யாகம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஓமன் அரண்மணை வட்டாரத்திடமிருந்து ரூ. 30 லட்சம் யாகத்திற்காக வழங்கப்பட்டது. இந்த யாகத்தில் ஓமன் மன்னரின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக